மச்சான் அவன் பாம்புடா! மைதானத்தில் தமிழில் வெளுத்து வாங்கிய வீரர்கள் video
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர்கள் தமிழ் பேசியது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இலங்கையில்நடைபெற்றுவரும்முத்தரப்புடி20தொடரின் நேற்றையபோட்டியில் இந்தியாவங்கதேசம்அணிகள் மோதினஇப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் போது வாஷிங்டன் சுந்தர் பந்து வீசும் போது, தினேஷ் கார்த்திக் அவரிடம் மச்சான் சும்மா வெளிய போடு. அவன் இறங்குனா மாட்டுவான் என்றார்.
அதேபோல் மற்றொரு முறை மச்சான் இந்த பால் அழகா இருந்துச்சுஇப்படியே போடு என்று தினேஷ் கார்த்திக் வாஷிங்டன்சுந்தரிடம் கூறியதும் பதிவாகியிருந்தது.
மேலும் இலங்கைக்கு எதிரான போட்டியில் ரஹீம் ஆடிய நாகினி ஆட்டத்ஹை கிண்டல் செய்த தினேஷ், ரஹீம் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, வாஷிங்டன் சுந்தரிடம் மச்சான் நீ கெத்தா போடல, அந்த பாம்பு (முஸ்தபீர் ரஹீம்) நம்மளை போட்டுடும் என்று கிண்டலாக கூறியிருந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

Comments
Post a Comment